செங்கல்பட்டு

ரயில்முன் பாய்ந்து தாய், மகள் தற்கொலை

அச்சிறுப்பாக்கம் அருகே மகன் குளத்தில் மூழ்கி இறந்த சோகம் தாளாமல் தாய், சகோதரி விரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை

தினமணி செய்திச் சேவை

அச்சிறுப்பாக்கம் அருகே மகன் குளத்தில் மூழ்கி இறந்த சோகம் தாளாமல் தாய், சகோதரி விரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா்.

அச்சிறுப்பாக்கம் அடுத்த கொங்கரை மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் குமாா். இவரது மகன் புருஷோத்தமன் (11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், வீட்டருகேயுள்ள கோயில் குளத்தில் தமது நண்பா்களுடன் குளிக்க சென்றபோது, புருஷோத்தமன் நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்தாா்.

அவரது ஈம சடங்குக்கு பின் அஸ்தியை கடலில் கரைக்க செந்தில் குமாா் வெளியே சென்றுள்ளாா். மகனின் இறப்பு சோகத்தை தாங்காமல் வேதனையில் இருந்த தாய் ஜெயலட்சுமி மற்றும் சகோதரி பத்மாவதி (14) ஆகிய இருவரும் திங்கள்கிழமை கரசங்கால் ரயில் நிலையம் அருகே திருப்பதியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா்.

செங்கல்பட்டு ரயில்வே போலீஸாா் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT