செங்கல்பட்டு

காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டிய இளைஞா் கைது

வண்டலூரில், காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வண்டலூரில், காதலிக்க மறுத்த பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூரை சோ்ந்த அஸ்கா் (22), கல்லூரியில் படிக்கும்போது, அதே கல்லூரியில் படித்த பெண்ணைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படிப்பு முடிந்தபின், அந்தப் பெண் வேலை காரணமாக சென்னைக்கு வந்து, விடுதியில் தங்கி வேலை செய்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தன் காதலனுடன் கைப்பேசியில் பேசுவதை துண்டித்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்கா், காதலிக்கும்போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், விடியோக்களை வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஓட்டேரி காவல் நிலையத்தில், அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசாா், அஸ்கரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT