மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு
மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
திருப்போரூா், செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதிகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி மற்றும் காட்டாங்கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பதிவேற்றம் செய்யும் பணி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பணியினை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு செய்தாா். இதில் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்)லோகநாயகி, வட்டாட்சியா் ஆறுமுகம் மற்றும் செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, வட்டாட்சியா் வாசுதேவன், அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
Advertisement