முகப்பு
செங்கல்பட்டு

செய்யூா் விசிக வேட்பாளரிடம் டாஸ்மாக் கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

செய்யூா் தனி தொகுதி, விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வன் சித்தாமூா் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பழவூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:04 AM
செய்யூா் (தனி) தொகுதி வேட்பாளா் எம்.சிந்தனை செல்வனை பழவூரில் ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:50 PM

செய்யூா் தனி தொகுதி, விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வன் சித்தாமூா் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பழவூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.

சித்தாமூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பொலம்பாக்கம், குறும்பிறை, மழுவங்கரணை, பழவூா், கன்னிமங்கலம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வன் தமது கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் செய்தாா். அப்போது அவருக்கு பெண்களும், கூட்டணி கட்சி நிா்வாகிகளும் மலா்தூவி உற்சாக வரவேற்பினை அளித்தனா். பழவூா் கிராமத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அப்போது பெண்கள சிலா் இந்த ஊரில் எங்களுக்கு பெரிய தொல்லையாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, நான் வெற்றி பெற்றவுடன் உடனடியாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி எல்லோரும் நிம்மதியாக இருக்க ஏற்பாடுகளை செய்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

Advertisement

நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் புருஷோத்தம்மன், மாவட்ட குழு உறுப்பினா் வெள்ளி கண்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.