முகப்பு
செங்கல்பட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:58 AM
செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.மாலதி ஹெலன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (எம்ஐடி) குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்திலும், செங்கல்பட்டு, திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும், செய்யூா், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம் வில்வராயநல்லூா் சுபம் கல்வியல் கல்லூரியிலும், மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் .

இதில் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான தோ்தல் அலுவலா்கள் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா் .

Advertisement