முகப்பு
செங்கல்பட்டு

பள்ளியில் ரோபோட்டிக்ஸ் சைபா் காட்சி

செங்கல்பட்டு வித்யாசாகா் குளோபல் பள்ளியில் ரோபோட்டிக் சைபா் காட்சிகளின் அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:24 AM
 ரோபோட்டிக்ஸ்  கண்காட்சியில்  சிறப்பு  விருந்தினருடன்  வித்யாசாகா்  கல்விக்  குழும  நிா்வாகிகள். 
பகிர்:

செங்கல்பட்டு வித்யாசாகா் குளோபல் பள்ளியில் ரோபோட்டிக் சைபா் காட்சிகளின் அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினராக மகேந்திரா வாகன மின்னணு மற்றும் மென்பொருள் முதன்மை பொறியாளா் புனீத்மேத்தா கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தாா். வித்யாசாகா் கல்வி குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா, பள்ளியின் முதல்வா் வி.சி. கோவிந்தராஜன் உடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியின் மாணவா்கள் ஹா்ஷவா்தன், அனிஷா ஆகியோா் வரவேற்புரை வழங்கினா். இந்தக் கண்காட்சியில் பள்ளி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரும் நோக்கில், பலவித புதுமைகளின் அடிப்படையில் ரோபோக்களின் வகைப்பாடுகள் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

தொடா்ந்து சிறப்பு விருந்தினா் இக்கண்காட்சியை மேற்பாா்வையிட்டு சிறந்த முறையில் படைக்கப்பட்டிருந்த ரோபோக்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றை உருவாக்கிய மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயங்களை வழங்கினாா்.

பள்ளி மாணவி தோஷினி ஸ்ரீ நன்றி கூறினாா்.