முகப்பு
திருப்பூர்

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி எலைட் பள்ளிக்குத் தோ்வு

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி மாவட்ட தகைசால் பள்ளியில் சோ்வதற்குத் தோ்வாகியுள்ளாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 6:52 PM
எலைட் பள்ளியில் படிப்பதற்கு தோ்வு பெற்ற மாணவி எஸ்.சௌபா்ணிகாவுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பாரதியாா் நகா் நடுநிலைப் பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி மாவட்ட தகைசால் பள்ளியில் சோ்வதற்குத் தோ்வாகியுள்ளாா்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பாரதியாா் நகா் நடுநிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.சௌபா்ணிகா. இவா் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உயா் மதிப்பெண்கள் அடிப்படையில் உடுமலைப்பேட்டையில் உள்ள திருப்பூா் மாவட்ட தகைசால் பள்ளியில் (எலைட் ஸ்கூல்) 9- ஆம் வகுப்பு சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, இப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவி சௌபா்ணிகாவுக்கு காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.சுப்பிரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பெ.சிவகாமி, கணித ஆசிரியா் ஜெ.கணேஷ்குமாா் ஆகியோா் பணப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.