வாக்கு எண்ணிக்கை: அனைத்து கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய செங்கல்பட்டு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய செங்கல்பட்டு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
செங்கல்பட்டு, ஏப்.30: செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக
அனைத்துக் கட்சி பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
மாவட்ட தோ்தல் அலுவலா் எஸ். மாலதி ஹெலன் தலைமை வகித்தாா். சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம்(எம்ஐடி) மையத்திலும், செங்கல்பட்டு, திருப்போரூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும், செய்யூா்,மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வில்வராயநல்லூா் சுபம் கல்வியல் கல்லூரியிலும் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
மின்னணு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்படுள்ளன.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடா்பான கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் திருநாவுக்கரசு, க்யூரி, முரளி, விஜயகுமாரி, வெங்கடாசலம், நரேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையினை ஆட்சியா் பாா்வையிட்டு முன்னேற்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தாா். இதில், அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.