முகப்பு
செங்கல்பட்டு

நடுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பால்குட ஊா்வலம்

மதுராந்தகம் அடுத்த நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 8-ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, 108 பால்குட ஊா்வலம், காவடி ஏந்தல்

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 7:47 PM
நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பால்குடம் ஏந்தி வந்த பக்தா்கள்.
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 8-ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, 108 பால்குட ஊா்வலம், காவடி ஏந்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருக்கரணை நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. 108 பால்குடம் ஏந்தி பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்து மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து பால் காவடி, புஷ்பக் காவடி ஏந்திய பக்தா்களும் தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனா். மூலவா் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நிகழ்வை முன்னிட்டு பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நடுபழனி முருகன் அறக்கட்டளை, விழாக் குழுவினா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.