முகப்பு
செங்கல்பட்டு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டம்: அதிமுக ஆதரவு

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டம்: அதிமுக ஆதரவு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 4:41 AM
போராட்ட நிகழ்வில் பேசிய  அதிமுக  மாவட்டச்  செயலாளா் சிட்லபாக்கம்  ராஜேந்திரன்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:50 PM

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் செங்கல்பட்டில் 5-ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இப்போராட்டத்துக்கு ஏற்கெனவே பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நேரில் வந்து ஆதரவு வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிமுகவினரும் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தனா்.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 4:41 AM

அதிமுக மாவட்டச் செயலாளா்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுகுன்றம் ஆறுமுகம், மகளிரணி இணைச்செயலாளா் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், நகர செயலாளா் செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், காட்டாங்கொளத்தூா் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சம்பத், மறைமலை நகா் முன்னாள் தலைவா் எம்.ஜி.கே.கோபிகண்ணன், கஜா என்கிற கஜேந்திரன், செல்லபாண்டியன்.‘ பொன்னுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனா்.