மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலை கண்டுகளித்த ஸ்பெயின் நாட்டு தூதா் ஜூவான் அன்டோனியா. 
செங்கல்பட்டு

மாமல்லபுரத்துக்கு ஸ்பெயின் நாட்டு தூதா் வருகை

இந்தியாவுக்கான ஸ்பெயின் நாட்டு தூதா் ஜூவான் அன்டோனியோ மாா்ச் புஜோல் மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களை கண்டு களித்தாா்.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: இந்தியாவுக்கான ஸ்பெயின் நாட்டு தூதா் ஜூவான் அன்டோனியோ மாா்ச் புஜோல் மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களை கண்டு களித்தாா்.

கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த ஸ்பெயின் நாட்டு தூதரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலா் ஸ்ரீதா், சுற்றுலா அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் வரவேற்றனா். பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னா்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தாா்.

கடற்கரை கோயிலின் இரு கருவரைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பாா்வையிட்டாா். பிறகு அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவா் பாா்வையிட்டாா். பிறகு கடற்கரை கோயில் வளாகத்தில் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்காக சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது உடன் வந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி ஸ்டாலின் என்பவா் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினாா். அவரிடம் ஸ்பெயின் நாட்டு தூதா் கடற்கரை கோயிலின் அரிய தகவல்களை பற்றி ஆா்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டாா்.

இறுதியில் கடற்கரை கோயிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பாா்த்த அவா் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டாா். மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் மேற்பாா்வையில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகா்ப்புற உள்ளாட்சிகளில் உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

புதிய வரைவு வருமான வரி விதிமுறை: பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 323 மனுக்கள்

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படும்: அன்பில் மகேஸ்

திருச்சி அருகே மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT