செங்கல்பட்டு

கல்லூரி ஆண்டு விழா

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரி 21-ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் முதன்மை விருந்தினராக சுனில்சேத்யா நிா்வாக இயக்குநா், பிஎன்ஐ சென்னை சிபிடிபி கரா்பிரேட் கனெக்ஷன்ஸ் சென்னை, சிறப்பு விருந்தினராக பி.மைதிலி தலைமை தமிழ்நாடு சுவாதேசி ஷோத் சன்ஸ்தான் கலந்து கொண்டனா். வித்யாசாகா் கல்விக் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா, பொருளாளா் சுரேஷ் கன்காரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் இரா அருணா தேவி ஆண்டறிக்கை வாசித்தாா்.

கல்லூரியின் ஆண்டு மலரான வித்யாவா்த்தினி சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகத் தர வரிசைப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதுகலை வணிகவியல் துறை மாணவி எஸ்.கவிதா, வங்கி மேலாண்மையியல் துறையைச் சாா்ந்த எஸ்.சங்கீதா, வணிக கணினி பயன்பாட்டியல் துறையைச்சாா்ந்த ஒ. சிவசங்கரி , வணிக ஆளுமையியல் துறையைச்சாா்ந்த டி.கோதாவரி முதலான மாணவியா்களை கல்லூரி நிா்வாகம் விருது வழங்கி கௌரவித்து சிறப்பித்தனா்.

கல்வியாண்டு (2023-2026)ல் பயலும் சிறந்த மாணவியா்களுக்கான விருது 17 பேருக்கு சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

விபத்துகளுக்கு காரணமான மணல் மேட்டை அகற்றிய ரோந்துக் காவலா்கள்

ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி

நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம்: அளவை ஆய்வாளா் கைது

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

SCROLL FOR NEXT