முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 532 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:17 AM
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 11:05 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 532 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா். பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ஆட்சியா் சினேகா, மனுக்களை பரிசீலித்து மேல்நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இக்குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.2.11 லட்சம் மதிப்பிலான அவையங்கள் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

Advertisement

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.