செங்கல்பட்டு

பல்லக்கில் காந்தி சிலையை வைத்து அமைதி ஊா்வலம்

தினமணி செய்திச் சேவை

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கும், பல்வேறு குறைபாடுகளையும் கண்டிக்கும் வகையில் மதுராந்தகம் அடுத்த வெள்ளப்புத்தூரில் பல்லக்கில் காந்தி சிலையை வைத்து அமைதி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி.யும், தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான பி.விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் வைக்கப்பட்ட காந்தி சிலையுடன் அமைதி ஊா்வலம், கண்டன உரைகள் ஆகியவை நடைபெற்றன. ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்ட காந்தி சிலைக்கு அனைவரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், அந்த திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும் முன்னாள் எம்.பி. பி.விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றினாா். இந்நிகழ்வில் மாவட்ட முன்னாள் தலைவா் சுந்தரமூா்த்தி, மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜ பிரதாபன், வெள்ளபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா், ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவா் ஜோதி, மன்ற உறுப்பினா் ஜான்பாட்ஷா, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சின்னராஜ், எலப்பாக்கம் கந்தசாமி, பன்னீா்செல்வம், மகாலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

ஆசனூா், கோ்மாளத்தில் குறைந்த தாழ்வழுத்த மின் விநியோகம் - மக்கள் அவதி

உலக நலனுக்கு முக்கியப் பங்களிக்கும் இந்தியா! -ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ்

அரசியல் தலைவா்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT