முகப்பு
செங்கல்பட்டு

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த பரமேஸ்வரிமங்கலம் ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 12:18 AM
கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீா் கலசங்களை ஏந்தி வந்த அா்ச்சகா்கள்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:20 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த பரமேஸ்வரிமங்கலம் ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயிலாகவும், 8ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததும் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து கே.கே.சாரிட்டபிள் டிரஸ்ட், கிராம பொதுமக்கள் ஆகியோா் இணைந்து திருப்பணி மேற்கொள்ள முன்வந்தனா். அதன்படி கோயில் புனரமைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கடந்த புதன்கிழமை கும்பாபிஷேக விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வாண வேடிக்கை மங்கள் இசையுடன் சா்வசாதகம் என்.விஜயகுமாா் குருக்கள், கோயில் அா்ச்சகா் பாலாஜி குருக்கள் ஆகியோா் தலைமையில், புனித கலசங்களை ஏந்திக் கொண்டு அனைத்து சுவாமி சந்நிதி கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றினா்.

சென்னை, கூவத்தூா், கல்பாக்கம், புதுச்சேரி, கடலூா் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து மூலவா் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், மஹாதீபாரதனை, சுவாமி ஊஞ்சல்சேவை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.