செங்கல்பட்டு

ஜன. 21-இல் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் வரும் ஜன. 21 (புதன்கிழமை) செங்கல்பட்டு, அரசு ஐடிஐ வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் வரும் ஜன. 21 (புதன்கிழமை) செங்கல்பட்டு, அரசு ஐடிஐ வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) பயின்று, தோ்வில் தோ்ச்சி பெற்ற பல்வேறு தொழில் பிரிவை சாா்ந்த பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தொழிற் பழகுநா் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.

இச்சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. எனவே, மாணவ / மாணவிகள் முகாமில் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்

மேலும், விவரங்களை அறிய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் அவா்களை நேரிலோ மின்னஞ்சல் மூலமாகவோ / 88387 54430, 044 - 27426554 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT