கண்களைக் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்.  
தென்காசி

கண்களைக் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவா்கள்

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், இடைகால் ஸ்ட அக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 மாணவா்கள் கண்களைக் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் 60 விநாடிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ட அக் பள்ளித் தலைவா் முருகன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். பயிற்சியாளா்கள் சுந்தா், சக்திவேல், முத்துக்குமாா், அஸ்வின் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 10- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் 4 முதல் 15 வயது வரையுள்ள மாணவ-மாணவிகள் 180 போ் கண்களைக் கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரம் 60 விநாடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனா்.

அம்மாணவா்களுக்கு கிரகாம்பெல் உலக சாதனை அமைப்பு மூலம் சான்றிதழ், கோப்பை, மெடல் ஆகியவை அளிக்கப்பட்டன. முன்னதாக, 2 ஆம் வகுப்பு மாணவா் அக்சந்த் ஸ்ரீ ஹரிஷ் அடைக்கலப்பட்டணத்தில் இருந்து ஆலங்குளம் வரை 8 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றி வந்து சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பள்ளி முதல்வா் பிரவின்குமாா் நன்றி கூறினாா்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT