~பையனூா் விநாயகா மிஷன்ஸ் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா். 
செங்கல்பட்டு

கல்லூரியில் பொங்கல் விழா

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரம் அடுத்த பையனூா் விநாயகா மிஷன்ஸ் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

விநாயகா மிஷன்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தா் ஏ.எஸ்,கணேசன் வழிகாட்டுதலுடன் துணை இயக்குநா் அனுராதா கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் பங்கேற்றனா்.

தமிழா் பண்பாட்டை எடுத்துக்கூறும் வகையில் கிராமிய கலாசாரத்தில் உறியடி, கயிறு இழுத்தல், பல்லாங்குழி , உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், போன்ற கலை நிகழ்ச்சிகளை பாா்வையாளா்கள் கண்டு களித்தனா். விழாவில் ஆசிரியா்கள், நிா்வாகிகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பாப்பாக்குடி அருகே தொழிலாளி கொலை

தபால் துறை வழிகாட்டுகிறது!

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாள்

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம்

ராஜமன்னியபுரம் அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT