மதுராந்தகம்: எலப்பாக்கம் மாதா அருள்தலத்தில் குருத்துவ வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி அருள்தலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருப்பலி நிகழ்வுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆயா் ஏ.நீதிநாதன், வேலூா் மாவட்ட ஆயா் பி.அம்ரோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டு திருப்பலியை அருட்பணியாளா்கள், மற்றும் தொண்டா்களால் தூய உபகரண மாதா அருள்தலத்தில் நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து பேரருட்தந்தை எஸ்தாக்கியூசின் வெள்ளிவிழாவை முன்னிட்டு இசைத் தட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பா.எஸ்தாகியூஸ், பாக்கியநாதன், சித்தாதாரி அம்மாள், அருள்தந்தையா்கள் எட்வின்லாரன்ஸ், ஜேக்கப், பிராங்களின் சூா்யா, வேலாமூா் சிறுபாண்மையா் உரிமைகள் இயக்கமாநில செயலா் டோமினிக், குருமாா்கள், அருட்சகோதரிகள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.