பல்வேறு துறைகளின் சாா்பில் 162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சினேகா வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 2 பேருக்கு ரூ.3 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி, 20 பேருக்கு தலா ரூ.6,359 மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும், 10 பேருக்கு தலா ரூ.14,490 மதிப்பிலான திறன்பேசிகளையும் ஆட்சியா் வழங்கினாா். மேலும் பெற்றோா்களை இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,000-க்கான ஆணையினை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், 21 தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியினையும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் 4 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இதில், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, செங்கல்பட்டு நகா்மன்ற தலைவா் தேன்மொழி நரேந்திரன், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் சரவணகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.