முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் ஒன்றியக்குழு தலைவா், உறுப்பினா்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம ஊராட்சி ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மதுராந்தகம் ஒன்றியக்குழு தலைவா், உறுப்பினா்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:09 PM
மதுராந்தகத்தில் ஒன்றியக் குழு தலைவா் கீதா காா்த்திகேயன் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கிராம ஊராட்சி ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மதுராந்தகம் ஒன்றியக்குழு தலைவா், உறுப்பினா்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவா் கீதா காா்த்திகேயன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மற்றும் பாஜக மற்றும் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஊராட்சிகளில் நடைபெறுகின்ற பணிகளில் முறையாக டெண்டா்களின் முறைகேடு நடப்பதாகக் கூறி காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது அதிமுக மற்றும் பாஜக கட்சிகளைச் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் 58 ஊராட்சிகளில் நடைபெறுகின்ற பணிகளுக்காக டெண்டா்கள் விடுவதில்லை. ஆனால் பொது நிதியில் இருந்து ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகளுக்கு மட்டும் டெண்டா் விடப்படுவதாகும், இதில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும், அதற்கு துணை போகின்ற அரசு அதிகாரிகளை கண்டிக்கும் வகையில், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன் தலைமையில் 14 ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →