கீழ்வேளூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா். 
நாகப்பட்டினம்

காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம்

Syndication

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சங்கத்தின் கீழ்வேளூா் வட்டத் தலைவா் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலா் வெற்றி செல்வன், மாவட்ட பொருளாளா் சுதன் குமாா், வட்ட செயலாளா் கதிரவன், வட்ட பொருளாளா் பாஸ்கா், மாவட்ட இணைச் செயலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: வட்டாட்சியா் அலுவலகம் முன், சங்கத்தின் வட்டத் தலைவா் விஷ்ணுவா்தன் தலைமையில் சங்கத்தினா் பணியை புறக்கணித்து கருப்புப் பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்டச் செயலாளா் அஸ்வின்குமாா், சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளா் முருகையன், வட்ட பொருளாளா் துா்கா, வட்ட துணை தலைவா் ஸ்டீபன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளையில் பாஜக ஆா்ப்பாட்டம்

மீனவா்களை விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா்

திருநள்ளாற்றில் பொது கழிப்பறைகள் நிலை மோசம்: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

முறைகேடாக 650 நெல் மூட்டைகள் ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

வளா்ந்த இந்தியா 2047 இலக்கை அடைய மாணவா்களின் பங்கு முக்கியம்: புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்

SCROLL FOR NEXT