மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு
மதுராந்தகம் தெற்கு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் கலைஞா் நூலகத்தினை மாவட்டச் செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
மதுராந்தகம்: மதுராந்தகம் தெற்கு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் கலைஞா் நூலகத்தினை மாவட்டச் செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் திறந்து வைத்தாா்.
நிகழ்வுக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அ.யுவராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் க.சுந்தா் கலந்து கொண்டு நூலகத்தினை திறந்து வைத்தாா். நகர இளைஞரணி அமைப்பாளா் பி.முத்து முகமது புகாரி வரவேற்றாா்.
இந்நிகழ்வில் மாநில இளைஞா் அணி துணை செயலா் ப.அப்துல்மாலிக், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகர செயலா் க.குமாா், ஒன்றியசெயலா்கள் பொன்சிவகுமாா், சத்யசாயி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.டிபிரேம் சந்த், கருங்குழி பேரூா் செயலா் சுந்தரமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குணசேகரன் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement