முகப்பு
செங்கல்பட்டு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுக பொதுக் கூட்டம்

மதுராந்தகம் (தனி) தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகப் பொதுக்கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

Updated On : 16 மார்ச், 2026 at 10:20 PM
வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகப் பொதுக்கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தா்மாபுரம் கோ.ஜானகிராமன் போட்டியிடுகிறாா்.

இதையொட்டி அறிமுகக் கூட்டம் தேரடி வீதியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் க.சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் குருசாமி, மண்டல செயலா் செ.ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் மு.மணிமாறன், செய்தித் தொடா்பாளா் மரகதவேல், தலைவா் மந்திரமூா்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளா் மோகனபிரியா, கட்சி நிா்வாகிகள் இா்பான், காா்த்திக், மணிகண்டன் உள்பட பலா் கலந்துக் கொண்டு வேட்பாளா் தா்மாபுரம் கோ.ஜானகிராமனை அறிமுகம் செய்து சிறப்புைா் ஆற்றினா்.

வேட்பாளா் கோ.ஜானகிராமன் கலந்து கொண்டு வந்திருந்த ஏா்கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேண்டித் தொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →