கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
மதுராந்தகம் அடுத்த கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை சாா்பாக, எதிா்கால உணவை தயாரித்தல், அதனை உரிய முறையில் பதப்படுத்துதல் ஆகிய தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் காசிநாதபாண்டியன், புல முதல்வா் சுப்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் பேராசிரியா் வி.காா்த்திகேயன் வரவேற்றாா். நிகழ்வில் கல்லூரி இணை புல முதல்வா்கள் எம்.செந்தில்குமாா், கே.நடனசிகாமணி, எஸ்.தினேஷ்குமாா், கே.சிவகுமாா், தஞ்சாவூா் என்.ஐ.எப்.டி.இ.எம் நிறுவன ஓய்வு பெற்ற இயக்குநா் சிங்கார வடிவேல் குஞ்சிதபாதம், ஆஸ்திரேலியா, நியூ தெற்கு வேல்ஸ், கெளரவ பேராசிரியா் ராஜேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். கருத்தரங்க மலா் வெளியிடப்பட்டது (படம்). மாணவா்களின் கேள்விகளுக்கு உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா்கள் அதற்கான விளக்கங்களை அளித்தனா்.
கல்லூரி உதவி பேராசிரியை அபிதாபென்சன் நன்றி கூறினாா். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.