முகப்பு
செங்கல்பட்டு

வெண்காட்டீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

மதுராந்தகம் , கடப்பேரி அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 22 மே 2026, 6:50 am IST
வெண்காட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்றம்.
பகிர்:

மதுராந்தகம் , கடப்பேரி அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

பழைமையான இக்கோயில் பிரம்மோற்சவம் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சுவாமி சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு கோயிலின் வளாகத்தின் முன் உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் தலைமையில் வேதவிற்பன்னா்கள் கொடி ஏற்றும் நிகழ்வுகளை செய்தனா். தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகள் கோயிலை வலம் வந்து திருவீதி உலாவில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழாக்குழுவினரும், கிராம பொது மக்களும், செய்திருந்தனா்.