முகப்பு
சென்னை

புறநகரில் அளவுச் சாப்பாடே ரூ.27!

பொன்னேரி, ஆக. 26: பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் தனியார் ஓட்டல்களில் அளவு சாப்பாட்டின் விலை ரூ.27 ஆகிவிட்டது. இதனால் ஏழை மக்கள் அவசரத்துக்கு ஓட்டல்களில் சாப்பிட முடியாத நி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 2:18 PM
பகிர்:

பொன்னேரி, ஆக. 26: பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் தனியார் ஓட்டல்களில் அளவு சாப்பாட்டின் விலை ரூ.27 ஆகிவிட்டது. இதனால் ஏழை மக்கள் அவசரத்துக்கு ஓட்டல்களில் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பொன்னேரி வந்து செல்கின்றனர். அவர்கள் பொன்னேரியில் உள்ள நடுத்தர ஓட்டல்களில் உணவருந்த வேண்டும் என்றால் கூட அளவு சாப்பாட்டுக்கே ரூ.27 வைத்திருக்க வேண்டும்.

 அந்த அளவுச் சாப்பாடும் பசியாற்றும் அளவுக்கு இல்லை. அரிசி, பருப்பு, சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய், காய்கறி ஆகியவற்றின் விலை உயர்வை இதற்குக் காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறினாலும் அவர்கள் வழங்க வேண்டிய உணவுக்கான அளவுக் கட்டுப்பாடோ, விலைக் கட்டுப்போடா, தரக்கட்டுப்பாடோ அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை. ஓட்டல்களில் சுகாதாரமாகவாவது இவை சமைத்துப் பரிமாறப்படுகின்றனவா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

Advertisement

 கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தனியார் ஒட்டல்களில் ரூ.20-க்கு அளவு சாப்பாடு வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்களிலேயே அத்திட்டம் மறக்கப்பட்டுவிட்டது.

 தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் உள்ள ஓட்டல்களில் அளவு சாப்பாட்டுக்கான விலையை அரசு உரிய முறையில் நிர்ணயம் செய்தால்தான் கிராமப்புறங்களில் வேர்வை சிந்தி பாடுபடும் ஏழைத் தொழிலாளி நகர்ப்புறங்களுக்கு வருகையில் ஓட்டல்களில் உணவருந்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.