கால்நடை மருத்துவப் படிப்பு : ஜூன் 29-ல் ரேங்க் பட்டியல்
சென்னை, ஜூன் 19: கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) உரிய 192 இடங்களுக்கு வரும் 29-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னையில் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் கவுன்சலிங் நடைபெறுகி
சென்னை, ஜூன் 19: கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி.) உரிய 192 இடங்களுக்கு வரும் 29-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
சென்னையில் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் கவுன்சலிங் நடைபெறுகிறது.
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வேப்பேரி, நாமக்கலில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 146 பி.வி.எஸ்சி. இடங்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 80 பி.வி.எஸ்சி. இடங்கள் என மொத்தம் 226 பி.வி.எஸ்சி. இடங்கள் உள்ளன.
இதில் வேப்பேரி கல்லூரி, நாமக்கல் கல்லூரி ஆகியவற்றிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள், அதாவது 34 இடங்கள் சென்றது போக, மொத்தம் 192 பி.வி.எஸ்சி. இடங்கள் இருக்கும்.
வேப்பேரியில் 124 பி.வி.எஸ்ஸி. இடங்கள், நாமக்கல்லில் 68 பி.வி.எஸ்சி. இடங்கள் என மொத்தம் 192 பி.வி.எஸ்ஸி. இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். இந்த இடங்களுக்கு 1,700 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இரண்டு மடங்குக்கு மேல்...: பி.வி.எஸ்ஸி. படிப்பில் சேர கடந்த ஆண்டு 800 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர்; இந்த ஆண்டு 1,700 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கட் - ஆஃப் மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கட் - ஆஃப் என்ன? பி.வி.எஸ்சி. படிப்பில் கடந்த ஆண்டு மாணவர்களைச் சேர்த்தபோது இருந்த கட் - ஆஃப் மதிப்பெண் விவரம்: பொதுப் பிரிவினர் - 164; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 137.5; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 130.75; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 145.75; பழங்குடி வகுப்பினர் - 144.5.
கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவுக்கு விண்ணப்பித்ததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் காட்டிலும் தாழ்த்தப்பட்ட - பழங்குடி பிரிவினரின் கட் - ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டு கட் - ஆஃப் எவ்வளவு? கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இரண்டு மடங்குக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், பொதுப் பிரிவினர் கட் - ஆஃப் மதிப்பெண் 200-க்கு 190 வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
""எம்.பி.பி.எஸ்., பி.இ. முதல் கட்ட கவுன்சலிங் முடிந்த பிறகு, கால்நடை மருத்துவத்துக்கு கவுன்சலிங் (ஜூலை 15, 16) நடத்தப்படுகிறது. இதனால், கட் - ஆஃப் மதிப்பெண் கடும் போட்டி காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போன மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு'' என்றார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ப. தங்கராஜு.
இணையதளத்தில்...: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை செங்குன்றம் அருகே அல்மாதியில் நடத்தப்படும் பி.டெக். (உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம்), தூத்துக்குடியில் நடத்தப்படும் பி.எஃப்.எஸ்சி. (மீனள அறிவியல்) பட்டப் படிப்புக்கும் ஜூன் 29-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
பி.வி.எஸ்சி. உள்பட அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் இணையதள முகவரி ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய்