சென்னை

சீருடை, காலணி இல்லாமல் என்.சி.சி. பயிற்சி!

சென்னை,அக். 28: தமிழகத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சீருடை,காலணி ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை; அத்துடன் 25 ஆண்டுகளாக உணவுப்படியும் உயர்த்தப்படவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே

கே.வாசுதேவன்

சென்னை,அக். 28: தமிழகத்தில் என்.சி.சி. மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சீருடை,காலணி ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை; அத்துடன் 25 ஆண்டுகளாக உணவுப்படியும் உயர்த்தப்படவில்லை.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தேசப்பற்று, தேசிய சிந்தனை, நல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் 1948-ல் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடங்கப்பட்டது. பிற மாணவர் இயக்கங்கள் சேவையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்கும் நிலையில், தேசிய மாணவர் படை, சேவை மனப்பான்மையை வளர்ப்பதோடு தேசப்பற்றையும் வளர்த்து பயிற்சி வழங்குகிறது.

தேசிய மாணவர்படையில் நல்ல உடலமைப்பு கொண்ட மாணவர்களே தேர்வு செய்யப்படுகின்றனர். இம்மாணவர்களுக்கு தற்காப்புகலை, ஆயுதங்களைக் கையாளுதல், அவசரக் காலத்தில் செயல்படுதல், முதலுதவி சிகிச்சை, சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு, தலைமைப் பண்பு உள்ளிட்ட 18 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மட்டும் இந்த அமைப்பில் சுமார் 95 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இதில் 60 சதவீதம் பள்ளி மாணவர்களும், 40 சதவீதம் கல்லூரி மாணவர்களும் ஆவர். பள்ளி மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு "ஏ' தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு "பி' தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு ஓராண்டில் நடைபெறும் 80 பயிற்சி வகுப்புகளில் குறைந்தது 60 சதவீத வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 2 மணி நேரமும், கல்லூரி மாணவர்களுக்கு 4 மணி நேரமும் நடைபெறுகிறது. பயிற்சி முகாமில் பங்கேற்றால், அதற்குத் தனியாகச் சான்றிதழ் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பில் முக்கியத்துவத்தை இழந்து இருப்பதால், இந்த அமைப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது கீழ் நிலையில் உள்ள என்.சி.சி. அதிகாரிகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

உயர்த்தப்படாத உணவுப்படி: அணிவகுப்புப் பயிற்சி,ஆயுதம் கையாளும் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.3 உணவுப்படியாக வழங்கப்படுகிறது.

2 மணிநேரப் பயிற்சியில் ஈடுபடும் பள்ளி மாணவர்களுக்கு இதை வைத்து ஒரு காபி கூட சாப்பிட முடியாத நிலைதான் நிலவுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டதாம்.

3 ஆண்டுகளாக சீருடை இல்லை

கடந்த 3 ஆண்டுகளாக, பயிற்சிக்குத் தேவைப்படும் சீருடையையும், காலணிகளையும் வழங்காமல் என்.சி.சி. நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக என்.சி.சி. அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் பனியனோடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து என்.சி.சி. கீழ் நிலை அதிகாரிகள் கேட்டால், தில்லியில் இருந்தே சீருடை வரவில்லை என்று கூறி உயர் அதிகாரிகள் தப்பிவிடுகின்றனராம். கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஒரு சில இடங்களில் பேண்ட் மட்டும் வழங்கப்பட்டாலும், 100 பேர்களில் 20 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறதாம். காலணியும் சில கல்லூரிகளில் வழங்கப்பட்டாலும் 100 பேர்களில் 15 பேருக்குதான் வழங்கப்படுகிறதாம்.

காலணிகள் முன்புபோல தரமானதாக வழங்கப்படுவதில்லை என்று மாணவர்கள் புகார் கூறுகின்றனர். சில மாதங்களிலேயே காலணி முற்றிலும் சேதமடைந்து விடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT