முகப்பு
சென்னை

மோனோ ரயில் திட்டப் பணிகள்: உயர்நிலைக் குழுக்கள் அமைப்பு

சென்னை, ஜூலை 19: சென்னையில் மோனோ ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; இதற்கான அரசாணையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர்ப்

Updated On : 19 செப்டம்பர், 2012 at 11:00 PM
பகிர்:

சென்னை, ஜூலை 19: சென்னையில் மோனோ ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்காக உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; இதற்கான அரசாணையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர்ப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ரூ. 16,650 கோடியில் மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

வண்டலூர் - ஆவடி - புழல், வண்டலூர் - தாம்பரம் - வேளச்சேரி, பூந்தமல்லி - வளசரவாக்கம் - வடபழனி, பூந்தமல்லி - போரூர் - கத்திபாரா என நான்கு வழித் தடங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

Advertisement

தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், இந்த திட்டத்தை வேகமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டத்துக்கான முழுமையான ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளதோடு, எந்தெந்த இடங்களில் நிலையங்களை அமைப்பது என்பதும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டப் பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் வடிவமைத்தல், திட்டத்தை நிறைவேற்றல் மற்றும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து பின்னர் ஒப்படைத்தல் என்ற வகையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணிகள் இப்போது நிறைவு பெற்றுள்ளன.

உயர்நிலைக் குழுக்கள்: இந்த ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்காகவும்,அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிப்பதற்காகவும் போக்குவரத்துத் துறை அமைச்சரின் தலைமையில் உயர்நிலைக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக்களை தமிழக அரசு இப்போது அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம், ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மோனோ ரயில் திட்டப் பணிகளும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.