இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) நடைபெறுகிறது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 6) நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் கூடுகிறது.
மக்களவைத் தேர்தல் நிதி திரட்டுவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக கூட்டம் கூடுகிறது.
பெரிய மாவட்டத்தைச் சேர்ந்த செயலாளர்கள் ரூ. 2 கோடியும், சிறிய மாவட்டத்தைச் சேர்ந்த செயலாளர்கள் ஒன்றரை கோடி ரூபாய் வரையும் நிதி திரட்ட கருணாநிதி உத்தரவிடுவார் எனத் தெரிகிறது.