முகப்பு
சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கருணாநிதி மோடிக்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து  நதிநீர் பங்கீட்டை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசிடம் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முறையிட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதனை தமிழத்தில் ஆளும் அரசு ஏற்கவில்லை..

அதிமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்., தமிழக விவசாயிகளின் நலனை காக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →