மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் பயன் அளிக்கக் கூடியது இல்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
சென்னையில் 60 வயதைக் கடந்தவர்கள் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் செய்வதற்கான திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மாதத்துக்கு வழங்கப்படும் 10 டோக்கன்களில், ஒரே பேருந்தில் செல்லக்கூடிய இடங்களுக்கு 5 நாள்கள் மட்டுமே சென்று வர முடியும். இரு பேருந்துகளில் மாறி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டுமானால், 2 நாள்களுக்கு மட்டுமே இந்த டோக்கன்கள் போதுமானவையாக இருக்கும்.
உதாரணமாக சென்னை கோடம்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டைக்கு 3.9 கி.மீ தொலைவு தான் என்றாலும் நேரடி பேருந்து இல்லை. கோடம்பாக்கத்திலிருந்து வள்ளுவர் கோட்டம் அல்லது தியாகராய நகர் சென்று அங்கிருந்து வேறு பேருந்தில் சைதாப்பேட்டை செல்ல வேண்டும். இதற்கு 2 டோக்கன்களை செலவழிக்க வேண்டும்.
ஒரேநாளில் இது போன்று இரு இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால் ஒரே நாளில் அனைத்து டோக்கன்களும் காலியாகிவிடும் என்பதுதான் உண்மை.
இது மூத்த குடிமக்களுக்கு உதவும் திட்டம் இல்லை. அவர்களை அலைக்கழிக்கும் திட்டம் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.