சென்னை

"நவராத்திரி 2016' கண்காட்சி தொடக்கம்

DIN

மகளிர் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர் உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனை, கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் "நவராத்திரி 2016' என்ற பெயரிலான இந்தக் கண்காட்சி அக்டோபர் 13-ஆம் தேதி வரை தினமும் காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெகிறது.
இந்தக் கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் வே.சாந்தா செய்திருந்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த கொலு பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், பருத்தி, பட்டாடைகள், காகிதம்-சணல்-களிமண் பொம்மைகள், சாமை, ராகி, சிறுதானிய உணவுப் பொருள்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், பத்தமடை பாய் பொருள்கள், கைத்தறி ஆடைகள், மூங்கில் பொருள்கள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மகளிர் குழுக்களுடன் புது வாழ்வுத் திட்டம், பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுங்களும், திருநங்கையர்-மாற்றுத்திறனாளிகள் குழுவினரும் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்கின்றனர்என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT