பெண்கள் பாதுகாப்பு: மின்சார ரயிலில் சிசிடிவி கேமரா பொருத்தம்
சென்னை புறநகர் மின்சார ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் சோதனை முயற்சியாக ரூ.70 ஆயிரம் செலவில் நான்கு சிசிடிவி கேமராக்கள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன.
சென்னைபெண்கள் பாதுகாப்பு: மின்சார ரயிலில் சிசிடிவி கேமரா பொருத்தம்
சென்னை புறநகர் மின்சார ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் சோதனை முயற்சியாக ரூ.70 ஆயிரம் செலவில் நான்கு சிசிடிவி கேமராக்கள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன.
சென்னை புறநகர் மின்சார ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் சோதனை முயற்சியாக ரூ.70 ஆயிரம் செலவில் நான்கு சிசிடிவி கேமராக்கள் திங்கள்கிழமை பொருத்தப்பட்டன.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னை மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் இப்பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் கே.கே.அஷ்ரஃப் கூறியது:
புறநகர் மின்சார ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், அதிகாலை வேளைகளில் சிலர் அத்துமீறி நுழைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெண்கள் பயணிக்கும் பெட்டியில் திருட்டு, பாலியல் சீண்டல்கள், அத்துமீறி நுழைவது போன்றவை நடைபெற்றால், அவற்றை அந்தப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் துல்லியமாக படம் பிடித்துவிடும்.
இந்தக் கேமராக்கள் மூலம் நேரலை கண்காணிப்பு செய்ய முடியாது. பெண்களின் தனிச் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு நேரலையைத் தவிர்த்துள்ளோம். ஆனால் ரயில் பெட்டியில் உள்ள கேமராவில் இருக்கும் விடியோ பதிவுகள் வாரம் ஒருமுறை சோதனை செய்யப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எளிதாகக் கண்டுபிடிக்க இந்த கண்காணிப்பு கேமராக்கள் உதவும் என்றார் அஷ்ரஃப்.