முகப்பு
உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினர்.
கிரிக்கெட்

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்திய இங்கிலாந்து அணியைப் பற்றி...

கிரிக்கெட்

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்திய இங்கிலாந்து அணியைப் பற்றி...

Updated On : 5 மார்ச், 2026 at 11:41 AM
உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினர்.
பகிர்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து அணி.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆம் ஆண்டுக்கான தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் நடத்தப்பட்ட ஐசிசி தொடரில் சிட்னி, மெல்பர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், பெர்த், ஹோபர்ட் உள்ளிட்ட நகர்களில் நடைபெற்றது.

இந்தியா, இலங்கை, நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.

குரூப் ஏ மற்றும் குரூப் பிரிவில் வெற்றி பெற்ற அணிகள் சூப்பர் 12 சுற்றில் மோதின. இதில், முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்தப் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 168 ரன்களை விக்கெட் விழாமல் எட்டி இங்கிலாந்து அணி அதிரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

2022 நவம்பர் 13 ஆம் தேதி மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதின.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற முன்னணி அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறாத நிலையில், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தவில்லை. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர்

அதன்படி, விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறி 137 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக மசூத் 38 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் எடுத்தனர். சாம் கரன் 3 விக்கெட்டுகளையும் ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் குவித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த அணியின் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களும், ஜோஸ் பட்லர் 26 ரன்களும், ஹாரி ப்ரூக் 20 ரன்களும் எடுத்தனர்.

4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் கரன் ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குப் பின்னர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு கோப்பைகளை வென்று இங்கிலாந்து அணி புதிய அத்தியாயம் படைத்தது.

summary

England won the 8th ICC T20 World Cup in Australia for the second time.

முழு கட்டுரையைப் படிக்க →