சென்னை

விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல்

DIN

விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி சென்னை அண்ணாசாலையில் மாணவர்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் ரா.திருமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடந்த 50 நாட்களாக தில்லியில் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், பொதுத்துறை வங்கிகளில் உள்ள கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT