சென்னை

தாய் மொழியில் தயக்கமில்லாமல் பேச வேண்டும்: வெங்கய்ய நாயுடு

DIN

நமது கலாசார, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தாய் மொழியில் தயக்கமில்லாமல் பேச வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஜீயர் கல்வி அறக்கட்டளை, விகாச தரங்கினி சார்பில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு நினைவு சமத்துவ நடைப் பயண நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சமத்துவ நடைப்பயணத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து தொடக்கி வைத்தார். அவர் பேசியது: 
ஸ்ரீ ராமானுஜர் மிகச்சிறந்த சமத்துவவாதியாகத் திகழ்ந்தவர். அனைத்துயிர்களும் ஒன்றென எண்ணி, நேசித்தவர். அதன்படி, வாழ்ந்து காட்டியதோடு மற்றவர்களுக்கும் இதனையே போதித்தார். நாம் அனைவரும் அனைத்து உயிர்களையும் நேசித்தல் வேண்டும்.
தாய்நாடு, தாய்மொழி, பாரம்பரியம், கலாசாரம், தர்மநெறி ஆகியவற்றைப் பெரியோர், சிறியோருக்குக் கற்றுத்தர வேண்டும். அவரவர் தாய்மொழியைத் தயக்கமில்லாமல் பேச வேண்டும். 
இதன்மூலமே, இந்திய கலாசார, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இதுவே சமத்துவ உணர்வுக்கு அடிப்படையாக உள்ளது. எனவே, அனைவரும் சமத்துவம் குறித்துப் பேசுவது, நினைப்பதோடு மட்டுமில்லாமல், செயல்படுத்தவேண்டும். அப்போதுதான், ஸ்ரீ ராமானுஜர் வலியுறுத்திய, சமத்துவ உணர்வு அனைவரிலும் மலரும் என்றார்.
நடைப்பயணத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய, வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், ஸ்ரீ ராமானுஜ பஜனைக்குழுவினர், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT