சென்னை

மாநில மனநல காப்பீட்டு கொள்கை வரைவு வெளியீடு: கருத்துகள் வரவேற்பு

DIN

தமிழ்நாடு மாநில மனநல காப்பீட்டு கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்தும் வரைவை அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மாநில நலவாழ்வு சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உகந்த மருத்துவ மற்றும் உளவள ஆதாரங்களை வழங்குவதில் உள்ள முக்கிய சவால்கள், சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சமூகம் எதிர்கொள்ளும் மனநலம் தொடர்பான முக்கிய கருத்துக்களை இந்த கொள்கை குறிப்பிடுகிறது.
இதில் குழந்தை பருவ மனநலப் பாதிப்புகள், தற்கொலைகள், பொருள் துஷ்பிரயோகம், வீடற்ற மக்கள் மற்றும் முதியோரின் மனநல பாதிப்புகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றின் மூலம் உயர்தர மனநல சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அவை முறையே, முற்காலத்திய திரையிடல் (உஹழ்ப்ஹ் ள்ஸ்ரீழ்ங்ங்ய்ண்ய்ஞ்), பரிந்துரை (தங்ச்ங்ழ்ழ்ஹப்) மற்றும் பிற தடுக்கப்படக்கூடிய மனநல நிலைகளுக்கான சுகாதாரச் சேவைகளை (டழ்ங்ஸ்ங்ய்ற்ண்ஸ்ங் ஙங்ய்ற்ஹப் ஏங்ஹப்ற்ட் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்) பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள் போன்ற சமூக குழுக்களின் சேவைகள் மூலம் நடைமுறைப்படுத்தவும் வரைவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜ்ஜ்ஜ்.ய்ழ்ட்ம்ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அனைத்து வல்லுநர்களும், பொதுமக்களும், அரசு சாரா நிறுவனங்களும், இந்த அறிக்கை மீது 3 வாரங்களுக்குள் தங்கள் கருத்துகளை வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT