சென்னை

புற்று நோய் சிகிச்சை: இங்கிலாந்து மருத்துவமனையுடன் மியாட் மருத்துவமனை ஒப்பந்தம்

ளுக்கு சிகிச்சை அளிக்க இங்கிலாந்தின் "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனையுடன் சென்னை மியாட் மருத்துவமனை வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

DIN

புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கிலாந்தின் "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனையுடன் சென்னை மியாட் மருத்துவமனை வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனை புற்று நோய் சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரிச்சர்ட் கோவன் ஆகியோர் ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் ரிச்சர்ட் கோவன், டாக்டர் சி.ஆர்.செல்வசேகர், கார்த்திக் மருதாசலம், வெங்கடேசன் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இங்கிலாந்தின் "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனை கடந்த 125 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.மியாட் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இங்கிலாந்தின் கிறிஸ்டி மருத்துவமனை பயிற்சி அளிக்கும். 
முற்றிய புற்று நோய் அல்லது எந்தவொரு இடத்திலும் சரி செய்ய முடியாது எனத் தீர்மானிக்கப்பட்ட புற்று நோய்கள் குறித்து கிறிஸ்டி மருத்துவ நிபுணர்களுடன் மியாட் மருத்துவமனையின் புற்று நோய் மருத்துவர் குழு விவாதித்து சிகிச்சை அளிக்கும். இத்தகைய விவாதம் இணையம் மூலமும் செய்யப்படும். மியாட் நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் அதிநவீன சிகிச்சைகளுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT