சென்னை

நடிகைக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை

DIN

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நடிகை விஜயசாந்திக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயசாந்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுக்குளம் பகுதியில் எனக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ், நடராஜன்,வசந்தா, பாலாஜி மற்றும் புகழேந்தி ஆகியோர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இனி அந்த இடத்தில் வேறு கட்டுமானங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நடிகை விஜயசாந்திக்கு சொந்தமான இடத்தில் எதிர்மனுதாரர்கள் சட்டவிரோதமாக இனி எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்ள இடைக்கால உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT