முகப்பு
சென்னை

பெண் மருத்துவர் கொலை வழக்கு: இளைஞர் விடுதலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி சத்யா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை சென்னை மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி சத்யா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை சென்னை மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவி டாக்டர் சத்யா. அவருடன் படித்து வந்தவர் சங்கீதா. கீழ்ப்பாக்கத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்ததனர். இந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது அறையில் சத்யா பிணமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அருகில் வீட்டில் இருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஹரிந்தம் தேவ்நாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 
சத்யாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, கொலை செய்துவிட்டு சத்யாவின் செல்லிடப்பேசியை திருடியதாக ஹரிந்தம் தேவ்நாத் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி மஞ்சுளா, மாணவி சத்யா கொலை வழக்கில் போலீஸார் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட ஹரிந்தம் தேவ்நாத்தை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →