சென்னை

ராயப்பேட்டையில் இன்று முதல் புத்தகத் திருவிழா

DIN

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது என்று தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டு நிறுவன அறங்காவலர் சண்முகம் தெரிவித்தார்.
250-க்கும் மேற்பட்ட அரங்குகள்: 250-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளில் 200 பதிப்பகங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன. புத்தக பதிப்பகத்தார் கலந்து கொள்வதால் போட்டித் தேர்வுக்கு தயார் செய்வோர், சில தலைப்புகள் குறித்து அறிந்து கொள்ள புத்தகங்களைத் தேடுவோர் பயன்பெறும் வகையில் அமையும்.
நாள்தோறும் கருத்தரங்கம்: புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கவிதைகள் வாசிப்பு, இராமனுஜர் 1000-த்தை சிறப்பித்தல், சினிமா மற்றும் மார்க்ஸ் பற்றிய கருத்தரங்கங்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழா ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை நடைபெறும் . வார இறுதி நாள்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்...: இந்தப் புத்தகத் திருவிழாவை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தொடங்கி வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT