சென்னை

44 மாற்றுத்திறனாளிகள் கைதாகி விடுதலை

DIN

சென்னை மெரீனாவில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், அவற்றில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை நீக்காமல், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறன் பணியாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தோர், சென்னை மெரீனாவில் உள்ள மாற்றுத்திறனாளி மாநில ஆணையரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அதன்படி இரு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) காலை முற்றுகையிடும் போராட்டத்துக்காகத் திரண்டு வந்தனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார், அவர்களை மறித்ததால் மாற்றுத்திறனாளிகள் காமராஜர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீஸார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 44 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT