பால் வியாபாரி வீட்டில்15 பவுன் நகை திருட்டு
சென்னை கோடம்பாக்கத்தில் புதன்கிழமை இரவு பால் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.5.25 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னைபால் வியாபாரி வீட்டில்15 பவுன் நகை திருட்டு
சென்னை கோடம்பாக்கத்தில் புதன்கிழமை இரவு பால் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.5.25 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் புதன்கிழமை இரவு பால் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், ரூ.5.25 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை, கோடம்பாக்கம் கோலவிழியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால் வியாபாரி செந்தில்குமார் (38) . இவர் கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி சௌமியாவை காண அவரது தாயார் வீட்டுக்கு புதன்கிழமை மாலை சென்று இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.5.25 லட்சம் ரொக்கம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறித்தவர் கைது: சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் துர்கா (22). தி.நகர் பொன்னியம்மன் தெருவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் இவர், புதன்கிழமை இரவு பணி முடித்து வீட்டுக்கு நடந்து சென்றார். பாண்டிபஜார் சாலை ம.பொ.சி. சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், துர்காவின் கழுத்திலிருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார்.
அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் வேலூரைச் சேர்ந்த சங்கர் (23) என்பதும், தி.நகரிலுள்ள டீக்கடையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.