சென்னை

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.5 லட்சம் சிக்கியது

DIN

சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.5 லட்சம் வெளிநாட்டுப் பணம் சிக்கியது. இது குறித்து 8 பேரிடம் விசாரணை நடந்து 
வருகிறது. 
சென்னை விமான நிலையத்திருந்து செல்லும் பயணிகள், வெளிநாடுகளுக்கு பணம் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து பன்னாட்டு விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை செல்ல சென்னை முகமது அசாருதீன், சாதிக் உள்பட 8 பேர் குழுவாக வந்தனர். 
அவர்கள் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் 8 பேரையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர். 
அவர்கள் வைத்திருந்த பெட்டியைச் சோதனை செய்தபோது கட்டு கட்டாக அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.22.5 லட்சம். அவற்றைப் பறிமுதல் செய்தனர். 
தங்கம் கடத்தியவரிடம் விசாரணை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் சென்னை பழனிகுமாரிடம் சோதனை செய்ததில் கால் கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT