சென்னை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ரோபோ கண்காட்சி

DIN

வடபழனி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மின்னணு,தகவல் தொடர்பியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ரோபோ கண்காட்சி திங்கள்கிழமை (அக்.16) நடைபெற்றது.
சென்னையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
ரோபோக்களின் செயல்பாடுகள், வெளிநாட்டு வர்த்தக,போர் கப்பல்களில் பயன்படுத்தப்படும் தனித்திறன் மிக்க ரோபோக்கள், ஆபத்தான பணிகளில் கையாளப்படும் ரோபோக்கள் ,எதிர்காலத்தில் ஆளுமைத் திறனுடன் செயல்படவிருக்கும் ரோபோக்கள் ஆகியவை குறித்து இந்திய கப்பல் படை ஓய்வு பெற்ற கேப்டன் ரமேஷ்வர் ரவி விவரித்தார். 
கல்லூரி முதல்வர் கே.துரைவேலு, துறைத் தலைவர் சி.கோமதி,கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.அனிதா கிறிஸ்டலின், கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT