தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின்சார்பில் வழங்கப்படவுள்ள "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' பெறத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின்சார்பில் வழங்கப்படவுள்ள "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' பெறத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களை சிறப்பிப்பதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுவோருக்கு ரூ.1,00,000, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படுகிறது.
2017}ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் நவ.5}ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.