சென்னை

செல்லிடப்பேசி பறிப்பு வழக்கு: இருவர் கைது

சென்னை வளசரவாக்கம் பகுதியில் தொடர்ச்சியாக செல்லிடப்பேசிகளைப் பறித்து வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் போலீஸார் புதன்கிழமை வாகனச்

DIN

சென்னை வளசரவாக்கம் பகுதியில் தொடர்ச்சியாக செல்லிடப்பேசிகளைப் பறித்து வந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் போலீஸார் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை செய்தனர்.
இருவரும் விருகம்பாக்கம் காந்திநகர் ஜமுனைத் தெருவைச் சேர்ந்த செ.மணிகண்டன் (19), அதே பகுதியைச் சேர்ந்த ஜீ.அஜித் (19) என்பதும், இருவரும் வளசரவாக்கம், விருகம்பாக்கம், மதுரவாயல், போரூர், பூந்தமல்லி பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களை நோட்டமிட்டு, செல்லிடப்பேசி பறிப்பில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 20 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் நாளை எஸ்ஐஆர் விவாதம்! ராகுல் தொடக்கி வைக்கிறார்!

போதிய ஆதாரம் இல்லை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT