முகப்பு
சென்னை

பராமரிப்புப் பணி: மே 2 முதல் 6 வரை ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் ரயில் பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள்

சென்னை

பராமரிப்புப் பணி: மே 2 முதல் 6 வரை ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் ரயில் பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

அரக்கோணம் ரயில் பணிமனை மேம்பாட்டுப் பணி காரணமாக அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், அரக்கோணம், திருத்தணி, திருவாலங்காடு இடையே பயணியர் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும். அதேபோன்று சென்னையிலிருந்து திருவள்ளூர்/ கடம்பத்தூர் இடையே புறநகர் ரயில் இயக்கப்படும்.
ஒரு சில புறநகர் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சென்னை - ஆவடி, ஆவடி-வேளச்சேரி இடையே மே 2 முதல் 6-ஆம் தேதி வரை பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 
இன்று ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே இயக்கப்படும் பயணியர் ரயில் செவ்வாய்க்கிழமை (மே 1) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி -திருப்பதி இடையே செல்லும் பயணியர் ரயில் நண்பகல் 1.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வழக்கமாகச் செல்லும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி பாதையில் செல்லாமல் விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →